வரலாறு படைத்த இந்திய அணி:



இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமன் செய்து வரலாறு படைத்தது.



இதனிடையே வரும் ஜூன் 1 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடர் தொடங்கும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. முன்னதாக,  கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி 20 போட்டியில், இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இரு அணிகளும் எந்தவொரு டி 20 தொடரிலும் தற்போது வரை நேரடியாக மோதவில்லை.


டி 20 உலகக் கோப்பை:


அதேநேரம் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு, இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் அந்த தொடரே கடைசி உலகக் கோப்பையாக அமையும் பட்சத்தில் இந்திய அணி இந்த மாபெரும் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.


இச்சூழலில், தான் 2024 ஆம் ஆண்டிற்கான டி 20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவின் அனுபவமில்லாத ஆடுகளங்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அனுபவம் இந்தியாவுக்குத் தேவைப்படும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.


விராட் கோலியும், ரோகித் சர்மாவும்:


இது தொடர்பாக இர்பான் பதான் பேசுகையில், “ தனிப்பட்ட முறையில் நான் விராட் கோலியை ஆடுகளத்தில் பார்க்க விரும்புகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அவரை பற்றி பேசும் போது அவர் சிறந்த ஃபார்மில் இல்லை. ஆனால், கடந்த ஐபிஎல் மற்றும் டி 20 போட்டிகள் அவரின் அற்புதமான போட்டிகள் ஆகும். இச்சூழலில் தான் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளையட உள்ளது. அங்கு நாம் விளையாடாத ஆடுகளங்கள் உள்ளன. அதனால் தான் சொல்கிறேன் இது போன்ற அனுபவமில்லாத ஆடுகளங்களில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவமான வீரர்கள் தேவைப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Tamil Thalaivas: புரோ கபடி லீக்... வெற்றி பயணத்தை தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ்!


 


மேலும் படிக்க: WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை!