இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 12 ஆம் தேதி) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இந்த டெஸ்ட் தொடர் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான முதல் தொடர் என்பதால், வெற்றி எண்ணிக்கையை தொடங்க ஆர்வமாக உள்ளனர். இந்த முக்கியமான போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி, தகுதி பெறாத நிலையில், அடிபட்டு வரும் என்பதால் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் விதமாக ஆட முயற்சிப்பார்கள் என பேசப்பட்டது. அதே போல இந்திய டெஸ்ட் அணியும், ஆஸ்திரேலியாவிடம் WTC இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு இந்த டெஸ்ட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



கண்டிப்பாக மழை பெய்யும்


இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது, இரவு முழுவதும் ஒளிபரப்பாகிறது. ஆனால் இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் உள்ளது. இந்த வாரம் முழுவதுமே டொமினிகாவில் வானிலை சிறப்பாக இல்லை. மழை ஐந்து நாட்களிலும் குறுக்கிட வாய்ப்புள்ளது. அதனால் ஆட்டம் தொடங்குவதற்கு தாமதமாகவோ, அல்லது முழு நாள் ஆட்டமும் பாதிக்கவோ செய்யலாம். அக்யூவெதர் தரும் தகவல்களின் படி, உள்ளூர் நேரத்தில் காலை 8 மணிக்கு மழை கடுமையாகப் பெய்யும் என்பதால் போட்டி சற்று தாமதமாகத் தொடங்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்: Crime: இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை.. 3 பேரை சினிமா ஸ்டைலில் ஏமாற்றிய பெண்.. தீவிரமாக தேடும் போலீசார்..


ஐந்து நாள் ஆட்டத்தில் வானிலை


முதல் நாளில் ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆட்டம் தொடங்கிய பிறகு, மழை வாய்ப்பு குறைவு என்பதால் ஆட்டம் நிறுத்தப்படாமல் போகலாம். இரண்டாவது நாளில், வானம் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதனால் முழு ஆட்டமும் ஆடப்படலாம். அதே நேரத்தில் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் மீண்டும் மழை மேகங்கள் சூழும் நிலையில், ஆட்டம் இடையிடையே தடை படலாம். இந்த ஆட்டம் முழுமையாக முடியுமா என்பது சந்தேகம்தான் என்றாலும், ஐந்து நாள் ஆட்டமும் நடந்தால் மட்டுமே முடிவு கிடைக்கும் என்று தெரிகிறது.



மேற்கிந்தியத் தீவுகள் அணி: கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ஜோசுவா டா சில்வா (கீப்பர்), ரஹ்கீம் கார்ன்வால், ஜேசன் ஹோல்டர், ரேமன் ரெய்ஃபர், கிர்க் மெக்கென்சி, கெமர் ரோச், அல்ஸாரி ஜோசப், ஜான்ன் வார்ரிக் ஜோசப், ஷான்


இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரீகர் பாரத் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, முகேஷ் குமார் , முகமது சிராஜ், ஜெய்தேவ் உனட்கட்