இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொல்லார்ட் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துவிட்டது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியிலம் இந்திய அணி 6 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று 7 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.


இந்த போட்டியில், வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேசமயத்தில், கடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு கடும் சவால் அளித்தது. இதனால், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஆடுவார்கள். மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி பலமாகவே உள்ளது.




இருப்பினும், இந்திய கேப்டன் விராட்கோலியின் பார்ம் மிகுந்த வேதனை அளிக்கும் விதமாகவே உள்ளது. இதனால், அவர் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அவர் மட்டும் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டால் இந்திய அணி நிச்சயம் மிகப்பெரிய ரன்களை குவிக்கும். கேப்டன் ரோகித் சர்மா கடந்த போட்டியிலே அதிரடி காட்டினார். இந்த போட்டியிலும் அவரது அதிரடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யரும் தங்களது அதிரடியை தொடருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். கடந்த போட்டியில் ஆடாத ஸ்ரேயார் அய்யர் இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. அறிமுக வீரர் ரவி பிஷ்னோய் கடந்த போட்டியில் அசத்தினார். இந்த போட்டியிலும் அவரது அசத்தல் பந்துவீச்சு தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.




மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் டி20 தொடர் என்றாலே அதிரடியாக ஆடக்கூடியவர்கள். அவர்கள் நாட்டில் இங்கிலாந்தை 3-2 என்ற கணக்கில் வென்றதால் இந்திய அணியையும் வீழ்த்தி தொடரை தங்கள் வசம் கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். நிகோலஸ் பூரண், பொல்லார்ட், ஓடீன் ஸ்மித் அதிரடி தொடர்ந்தால் அந்த அணி இமாலய ரன்களை குவிக்கும். கொல்கத்தா மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானம் என்பதால் ரசிகர்களுக்கு பேட்டிங் விருந்து உள்ளது என்றே கூறலாம்.


இரு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.  இதில் இந்திய அணி 11 டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண