இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இன்று நடைபெற்று வருகிறது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஆடவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யா ஏற்றுக்கொண்டார். இந்திய அணியின் பேட்டிங்கை இஷான்கிஷானும், ஸ்ரேயாஸ் அய்யரும் தொடங்கினர்.




ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இஷான்கிஷான் அவுட்டானார். அவர் 13 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யரும், தீபக்‌ஹூடாவும் ஜோடி சேர்ந்தனர், கடந்த சில போட்டிகளாக சொதப்பிய ஸ்ரேயாஸ் அய்யர் இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரும், தீபக் ஹூடாவும் இணைந்து மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை விரட்டினர். இவர்கது அதிரடியால் இந்திய அணி 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.


அணியின் ஸ்கோர் 114 ரன்களை எட்டியபோது தீபக் ஹூடா அவுட்டானார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் அய்யரும் அவுட்டானார். அவர் 40 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 64 ரன்கள் விளாசி ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் கடந்த போட்டியில் 11 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஓடின் ஸ்மித் அவுட்டானார்.




பின்னர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் மிரட்டினார். அவர் 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஓடீன் ஸ்மித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 189 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண