IND vs SL LIVE Score: அரையிறுதிக்குச் சென்ற இந்தியா - 55 ரன்களுக்குச் சுருண்ட இலங்கை

India vs Sri Lanka LIVE Score, World Cup 2023: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றது. அதன் உடனடி அப்டேட்டுகளை இங்கு காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 02 Nov 2023 08:31 PM
50 ரன்களை கடந்த இலங்கை..

19 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 51 ரன்களை சேர்த்துள்ளது.

2 விக்கெட்டுகள் மட்டுமே அவசியம்..

15 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 2 வ்க்கெட்டுகள் மட்டுமே அவசியம்.

சாதனை படைத்த சமன்..

ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற, ஜாகீர் கானின் சாதனையை ஷமி(44) சமன் செய்துள்ளார்.

8வது விக்கெட் காலி

12 ரன்கள் சேர்த்து இருந்த மேத்யூஸ், ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மேலும் ஒரு விக்கெட்..

ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் சமீரா

இந்திய அண் வெற்றி பெற 4 விக்கெட்டுகள் அவசியம்..

11 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 21 ரன்களை சேர்த்துள்ளது.

10 ஓவரில் பாதி விக்கெட்டுகள் காலி..

முதல் 10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 14 ரன்களை மட்டும் எடுத்துள்ளது.

மீண்டும்..மீண்டும் விக்கெட்..

ஹேமந்தா எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஷமி பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

மீண்டும் ஒரு விக்கெட்..

24 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஒரு ரன் மட்டும் எடுத்த அசலங்கா, ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தடுமாறும் இலங்கை..

7 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 12 ரன்களை மட்டும் சேர்த்துள்ளது.

ரன் எடுக்க முடியாமல் திணறும் இலங்கை..

6 ஓவர்கள் முடிந்தும் இலங்கை அணி 9 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் எக்ஸ்ட்ராக்கள் மட்டுமே 4 ரன்கள் ஆகும்.

மீண்டும் மெய்டன் ஓவர்..

5வது ஓவரிலும் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டன் ஆக்கினார் பும்ரா

கலங்கும் இலங்கை

4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 7 ரன்களை சேர்த்துள்ளது.

தெறிக்கும் ஸ்டம்புகள்..

சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில், இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ், ஸ்டம்புகள் தெறிக்க கிளீன் போல்டானார்.

திணறும் இலங்கை

3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 3 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

3வது வீரர் டக்-அவுட்

தொடக்க வீரர்களை தொடர்ந்து சமரவிக்ரமாவும் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார்.

சரியும் விக்கெட்டுகள்..

முதல் ஓவரின் முதல் பந்திலேயே நிசாங்கா ஆட்டமிழந்த நிலையில், சிராஜ் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே கருணரத்னே டக்-அவுட் ஆனார்.

மிரட்டலான முதல் ஓவர் முடிந்தது..

முதல் ஓவரில் 2 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் பும்ரா

கோல்டன் டக் அவுட்டான நிசங்கா! இலங்கைக்கு அதிர்ச்சி தொடக்கம்!

358 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பதும் நிசங்கா பும்ரா வீசிய முதல் பந்திலே எல்.பி.டபுள்யூ ஆகி அவுட்டானார். 

மதுஷங்கா அபாரம்..

இலங்கை சார்பில் சிறப்பாக பந்துவீசிய மதுஷங்கா 10 ஓவர்களில் 80 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பேட்டிங்கில் அசத்தல்

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கில் 92 ரன்கள், கோலி 88 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்களை குவித்தனர். 

இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு

அதிரடியா விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் சேர்த்தது.

350 ரன்களை கடந்த இந்தியா

49 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 352 ரன்களை குவித்துள்ளது.

12 பந்துகள் மிச்சம்..

48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 339 ரன்களை குவித்துள்ளது.

அதிரடி ஆட்டம் முடிவுக்கு வந்தது..

அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 56 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கடைசி 3 ஓவர்கள் மிச்சம்

47 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 320 ரன்களை சேர்த்துள்ளது.

46 ஓவர்கள் முடிந்தது..

46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்களை சேர்த்தது.

300 ரன்களை எட்டிய இந்தியா...

44.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 300 ரன்களை கடந்துள்ளது. 

300-ஐ நெருங்கும் இந்தியா

43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 288 ரன்களை குவித்துள்ளது.

அரைசதம் விளாசிய ஸ்ரேயாஸ்

அதிரடியாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார்

8 ஓவர்கள் மட்டுமே மிச்சம்

42 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 279 ரன்களை சேர்த்துள்ளது


 


 

சூர்யகுமார் யாதவ் அவுட்

12 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ்

கடைசி 10 ஓவர்கள்..

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை குவித்துள்ளது. 

கே.எல். ராகுல் அவுட்..

நிதானமாக விளையாடி வந்த கே.எல். ராகுல் 21 ரன்கள் சேர்த்திருக்க, சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

250 ரன்களை கடந்த இந்தியா..!

38.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 250 ரன்களை எட்டியது.

250 ரன்களை நெருங்கும் இந்தியா..

38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 248 ரன்களை சேர்த்துள்ளது. 


 

50 ரன்கள் பார்ட்னர்ஷிப்..

ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே. எல் ராகுல் கூட்டணி 38 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளது.

விடாது அடிக்கும் இந்தியா

36 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்களை சேர்த்துள்ளது.

அபாரமான கூட்டணி முடிந்தது...

வெறும் 4 ரன்கள் சேர்த்து ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், கில் மற்றும் கோலி கூட்டணி 189 ரன்களை சேர்த்து, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

அடுத்தடுத்து சரிந்த முக்கிய விக்கெட்..

இந்திய அணி 193 ரன்கள் எடுத்து இருந்தபோது கில்லும், 196 ரன்கள் எடுத்திருந்த போது கோலியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கோலி ஏமாற்றம்

88 ரன்கள் சேர்த்து இருந்த கோலி மதுஷங்கா பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

சதத்தை தவறவிட்ட கில்..

92 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட, 92 ரன்களை சேர்த்து இருந்த கில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் மட்டுமே மிச்சம்..

30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை சேர்த்துள்ளது.


 


 

கில் ஆட்டமிழந்தார்..

92 ரன்களை சேர்த்து இருந்த கில், மதுஷங்கா பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

200 ரன்களை நெருங்கும் இந்தியா

29 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 185 ரன்களை சேர்த்து அதிரடியாக விளையாடி வருகிறது

முதலில் சதமடிக்கப் போவது யார்?

28 ஓவர்கள் முடிவில் கோலி 84 ரன்களையும், கில் 75 ரன்களையும் சேர்த்து விளையாடி வருகின்றனர். 

27 ஓவர்கள் முடிந்தது..

27 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 164 ரன்களை சேர்த்துள்ளது.

விடாது அடிக்கும் கூட்டணி..

சுப்மன் கில் மற்றும் விராட் கோலி கூட்டணி 150 ரன்களை கடந்துள்ளது.

150 ரன்களை கடந்த இந்தியா...

25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 151 ரன்களை சேர்த்துள்ளது.

150 ரன்களை நெருங்கும் இந்தியா..

24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை சேர்த்துள்ளது. 

பரபரப்பான ஆட்டம்

22 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 132 ரன்களை சேர்த்துள்ளது

தொடரும் கோலியின் சாதனை..

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரராக இல்லாமல் அதிக 50+ ஸ்கோர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப்படைத்தார் விராட் கோலி

20 ஓவர்கள் முடிந்தது..

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 120 ரன்களை சேர்த்துள்ளது.

கோலி அசத்தல் - புதிய சாதனை

400 ரன்களை கடந்த கோலி, நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கில் அசத்தலான அரைசதம்

இந்திய வீரர் கில் 55 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

18 ஓவர்கள் ஓவர்

18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 113 ரன்களை சேர்த்துள்ளது.

100 ரன்கள் பார்ட்னர்ஷிப்..

சுப்மன் கில் - கோலி கூட்டணி 100 ரன்களை கடந்துள்ளது.

கோலி அரைசதம் - இந்தியா சதம்

கோலி அரைசதம் கடந்ததுடன் இந்திய அணி 100 ரன்களை கடந்துள்ளது.

அரைசதம் நெருங்கும் கோலி..

கோலி 48 பந்துகளில் 46 ரன்களை சேர்த்துள்ளார்.

15 ஓவர்கள் முடிந்தது...

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 88 ரன்களை சேர்த்துள்ளது.

சச்சின் சாதனையை முறியடித்த கோலி

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஓராண்டில் ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (7) சாதனையை கோலி (8) முறியடித்துள்ளார்.

100 ரன்களை நெருங்கும் இந்தியா

13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 82 ரன்களை சேர்த்துள்ளது.

மெல்ல மெல்ல ஏறும் ரன் ரேட்...

12 ஓவர்கள் முடிவில்  இந்திய அணி 72 ரன்களை எடுத்துள்ளது.

பவர்பிளே ஓவர்..

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 60 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு ஓவர் மிச்சம்,..

பவர்பிளேயின் 9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 57 ரன்களை சேர்த்துள்ளது

50 ரன்களை கடந்த இந்தியா

8.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 50 ரன்களை கடந்துள்ளது.

50 ரன்களை நெருங்கும் இந்திய அணி..

8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 47 ரன்களை சேர்த்துள்ளது.

ரன் எடுக்கும் இந்தியா..

7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 42 ரன்களை சேர்த்துள்ளது

6 ஓவர்கள் காலி..

6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 33 ரன்களை சேர்த்துள்ளது.

அடுத்தடுத்து மெய்டன்..

அடுத்தடுத்து இரண்டு ஓவர்களிலும் ரன் ஏதும் கொடுக்காமல் சமீரா மெய்டன் ஆக்கியுள்ளார்.

இந்தியா நிதான ஆட்டம்..

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 25 ரன்களை சேர்த்துள்ளது.

இலங்கை அபார பந்துவீச்சு..

4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 14 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

மெய்டன் ஓவர்..

போட்டியின் இரண்டாவது ஓவரை சுப்மன் கில்லுக்கு எதிராக வீசிய சமீரா, ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் மெய்டன் ஆக்கினார்.

முடிந்தது முதல் ஓவர்..

முதல் ஓவர் முடிவில் இந்திய அணி 8 ரன்களை சேர்த்துள்ளது.

400 ரன்களை கடந்த ரோகித் சர்மா..

நடப்பு உலகக் கோப்பையில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா. மொத்தமாக 402 ரன்களை குவித்துள்ளார்.

ஆரம்பமே அதிரடி..

முதல் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ரோகித், இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்டானார்..

IND vs SL LIVE Score: இந்தியா - இலங்கை அணிகள் மோதல் .. ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார்?

இந்தியா: ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் 


இலங்கை: பதும் நிசங்கா, திமத் கருணரத்னே, குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், துஷன் ஹேமந்தா, மகேஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, துஷ்மந்தா சமேரா, தில்ஷன் மதுஷங்க 

IND vs SL LIVE Score: டாஸ் வென்ற இலங்கை.. முதலில் பேட் செய்யப்போகும் இந்தியா..

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்ய உள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

Background

IND vs SL LIVE Score:


உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை(India vs Sri Lanka) அணிகள் மோதுவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கிரிக்கெட்டின் திருவிழாக்களில் ஒன்றாக 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 32 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கத்தை விட அனைத்து போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. 


நடப்பு தொடரை பொறுத்தவரை இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்து விடும். இந்திய அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா சிறந்த பார்மில் உள்ளார். அதேபோல் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இன்னும் சுப்மல் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்தால் வெற்றி இந்திய அணிக்கே கிடைக்கும். பந்து வீச்சிலும் பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.


அதேசமயம் இந்த உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கும் நிலையில், அனைத்திலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான பந்தயத்தில் பிற அணிகளுக்கு கடுமையான சோதனையை கொடுக்க வாய்ப்புள்ளது.அந்த அணி கடைசியாக ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனால் சோகமாக உள்ள ரசிகர்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி நம்பிக்கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அதேசமயம் இந்தியா - இலங்கை(India vs Sri Lanka Head to Head) அணிகள் இதுவரை 167 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இதில் 98 போட்டிகளில் இந்தியாவும், 57 போட்டிகளில் இலங்கையும் வெற்றி கண்டுள்ளது.  ஒரு ஆட்டம் டிரா ஆன நிலையில், 11 ஆட்டங்கள் முடிவில்லாமல் கைவிடப்பட்டது. அதேபோல் உலகக்கோப்பையில் இரு அணிகளும் 9 முறை நேருக்கு நேர் மோதி தலா 4 வெற்றிகளுடன் சம நிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 


மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் வெகுவாக எழுந்துள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சிறந்தது என்பதால் இதில் ரன் மழையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.