Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Rasi Palan Today, November 16: இன்று கார்த்திகை மாதம் முதல் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
Continues below advertisement

ராசிபலன்
Source : abp
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 16, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான உயர்வுக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் பலரின் அறிமுகங்களை உருவாக்குவீர்கள். உயர்கல்வி தொடர்பான குழப்பங்களில் தெளிவுகள் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.
ரிஷப ராசி
கால்நடை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் தொடர்பான வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். சமூகப் பணிகளில் வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் அனுபவம் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.
மிதுன ராசி
குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவு வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் விரயங்கள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
கடக ராசி
உங்கள் கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தெளிவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். அசதி மறையும் நாள்.
சிம்ம ராசி
வியாபார பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். யோகம் நிறைந்த நாள்.
கன்னி ராசி
கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
துலாம் ராசி
வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். சமூகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
விருச்சிக ராசி
கணவன் மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.
தனுசு ராசி
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரம் ரீதியான பிரச்சனைகளில் தெளிவுகள் பிறக்கும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில வேலைகள் சாதகமாகும். தன வரவுகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயம் ஏற்படும். அனுபவம் கிடைக்கும் நாள்.
மகர ராசி
குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும். தொழிலில் திடீர் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
கும்ப ராசி
திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் ஏற்படும். வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறதி தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமித்தமான முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
மீன ராசி
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
Continues below advertisement