இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என மோசமான தோல்வியை தழுவியது. அதைதொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி, ராஞ்சியில் நடைபெற்றது. ரோகித் மற்றும் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் பாண்ட்யா தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், 176 ரன்கள் என்ற இலக்கை அடையாமல் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால், நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தான் இரண்டாவது டி-20 போட்டி இன்று நடைபெற உள்ளது.


இரண்டாவது டி-20 போட்டி:


லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இந்த மைதானத்தில் 8 டி-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான், அதிகபட்சமாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதனால், இன்றைய போடியில் டாஸ் முக்கிய வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடித்திருக்க இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்கது என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய அணி நிலவரம்:


 


முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தரை தவிர வேறு யாரும் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.  சுப்மன் கில், இஷான் கிஷன், கேப்டன் பாண்ட்யா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தினால் பேட்டிங்கில் இந்திய அணி வலுபெறும். ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சி மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட, வாஷிங்டன் சுந்தர் இன்றைய போட்டியிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


நியூசிலாந்து அணி நிலவரம்:


நியூசிலாந்து அணியை பொருத்த வரையில் ஆலன், கான்வே மற்றும் மிட்செல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சில், கேப்டன் சாண்ட்னர் கடைசி போட்டியில் சூர்யகுமார் யாதவிற்கே மெய்டன் ஓவர் வீசி கவனம் ஈர்த்தார். அவருக்கு பக்கபலமாக பிரேஸ்வெல் போன்ற சக வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.


 


உத்தேச இந்திய அணி:


சுப்மான் கில், இஷான் கிஷன் (வி.கீ.), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் , குல்தீப் யாதவ்/யுஸ்வேந்திர சாஹல்


உத்தேச நியூசிலாந்து அணி:


ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல்,  மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பிளேர் டிக்னர், இஷ் சோதி, பென் லிஸ்டர், லாக்கி பெர்குசன்


 


கான்வே ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவராக உள்ளார். மிட்செல் சாண்ட்னர் தலைமயில், நியூசிலாந்து அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது.