இந்தியர்களின் வாழ்வில் கிரிக்கெட்டும், சினிமாவும் வெறும் பொழுது போக்காக மட்டுமின்றி, பிரிக்க முடியாத அளவிற்கு வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவும் மாறியுள்ளன. அதை மேலும் சிறப்பாக மாற்றும் வகையில் தான், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் செயல்படும் திரையுலக நட்சத்திரங்கள் சேர்ந்து விளையாடும், நட்சத்திர கிரிக்கெட் லீக் கடந்த 2010ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.


அட்டவணை வெளியீடு:


இந்த தொடரில் தொடக்கத்தில் வெறும் 4 அணிகள் மற்றும் பங்கேற்ற நிலையில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. பல்வேறு திரையுலகை சேர்ந்த அனைத்து திரை நட்சத்திரங்களையும் ஒரே இடத்தில் காண முடியும் என்பதால், ரசிகர்கள் இடையேயும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தான் நடப்பாண்டிற்கான, நட்சத்திர கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.






போட்டி தொடங்கும் தேதி:


பிப்ரவரி 18ம் தேதி தொடங்கி மார்ச் 12ம் தேதி வரையில் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. பிப்ரவரி 18,19 ஆகிய தேதிகளில் லக்னோவில் 4 லீக் போட்டிகளும், பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில்  ஜெய்பூரில் 4 லீக் போட்டிகளும் நடைபெற உள்ளன. அதைதொடர்ந்து மார்ச் மாதத்தில் 4, 5 ஆகிய தேதிகளில் முறையே பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் தலா 2 லீக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடைசி 4 லீக் போட்டிகள்  11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஜோத்பூரில் நடைபெற உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 4 லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.


அரையிறுதிச்சுற்று:


லீக் போட்டிகளின் முடிவில்,  புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 18ம் தேதி இரண்டு அரையிறுதி போட்டிகளும் ஐதராபாத்தில் நடைபெறும். புள்ளிப்பட்டியலில் முறையே 1 மற்றும் 4வது இடத்தை பிடித்த அணிகள் முதல் அரையிறுதி போட்டியிலும், 2 மற்றும் 3வது இடத்தை பிடித்த அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியிலும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள், ஐதராபாத்தில் மார்ச் 19ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. 


சென்னை ரைனோஸ் அணிக்கான போட்டிகள்:


18.02.2023: சென்னை ரைனோஸ் - மும்பை ஹீரோஸ்


25.02.2023: சென்னை ரைனோஸ் - போஜ்பூரி தபாங்ஸ்


04.03.2023: சென்னை ரைனோஸ் - கர்நாடகா புல்டோசர்ஸ்


12.03.2023: சென்னை ரைனோஸ் - தெலுகு வாரியர்ஸ்


 


பங்கேற்க உள்ள 8 அணிகளின் விவரங்கள்:


பெங்கால் டைகர்ஸ் - கேப்டன் ஜிஷு


போஜ்பூரி தபாங்ஸ் - கேப்டன் மனோஜ் திவாரி


சென்னை ரைனோஸ் - கேப்டன் ஆர்யா


கர்நாடகா புல்டோசர்ஸ் - கேப்டன்  சுதீப்


கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் - கேப்டன்  குஞ்சகோ போபன்


மும்பை ஹீரோஸ் - கேப்டன்  ரிதேஷ் தேஷ்முக்


பஞ்சாப் டி ஷேர் - கேப்டன்  சோனு சூட்


தெலுகு வாரியர்ஸ் - கேப்டன்  அகில் அக்கினேனி