கடந்த 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.


இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்ற்றும் 3 டி20 போட்டிகளிலும் வென்று இந்திய அணி மொத்தமாக தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.


இந்த போட்டிகள் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உள் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்தை எதிர் கொள்ள தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.


1999ல் சம்பவம் செய்த சச்சின் டெண்டுல்கர்:


முன்னதாக, கடந்த 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் செய்த சம்பத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்: கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 முறை இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.


இதில் அவர் ஆடிய ஒவ்வொரு ஆட்டமும் வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடிய இன்னிங்ஸ்கள் தான். அந்த வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.


அப்போது சச்சின் டெண்டுல்கரின் 71 வது டெஸ்ட் போட்டி (110வது இன்னிங்ஸ்). இந்த போட்டியின் போது டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர் சடகோப்பன் ரமேஷ், தேவங் காந்தி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, இரண்டாவது நாள் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் சவுராவ் கங்குலியுடன் இணைந்து பார்டன்ர்ஷிப் அமைத்தார். பின்னர் தன்னுடைய முதல் இரட்டை சதத்தையும் பதிவு செய்தார். 344 பந்துகள் களத்தில் நின்ற சச்சின் டெண்டுல்கர் 217 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.