புதிய வீரர்களை வாய்ப்பு கொடுக்கவும், அவர்களின் திறமையைக் கண்டறியவும் நியூசிலாந்து சுற்றுப் பயணம் அமையும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியுடன் வெளியேறியது.


பாகிஸ்தானை எதிர்த்து விளையாடி இங்கிலாந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், உலகக் கோப்பை போட்டி முடிவடைந்த நிலையில், நியூசிலாந்து இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர்களுடன் சுற்றுப் பயணம் சென்றுள்ளது.


ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடருக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார்.






கடந்த 18ஆம் தேதி நடைபெற இருந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டம், மழையால் டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது. 2ஆவது டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.


தீபக் ஹூடா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சுருட்டினார். சஹலுக்கும் 2 விக்கெட்டுகள் கிடைத்தது.
இந்நிலையில், நாளை மூன்றாவது டி20 ஆட்டம் இரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
”இந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் வயதில் சிறியவர்கள், ஆனால் அனுபவத்தால் அல்ல. அவர்கள் நிறைய ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளனர். சர்வதேச போட்டிகளிலும் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர்.
 
சூழ்நிலைகளைப் பொறுத்து நானும் அனுபவம் வாய்ந்த வீரர்களும் வெவ்வேறு ரோல்களில் விளையாடுவோம். ஆனால், இந்த நியூசிலாந்து டூர் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கானது ஆகும்.  உலகக் கோப்பை முடிந்து விட்டது. அது நமக்கு ஏமாற்றத்தை அளித்ததுதான். ஆனால், எதையும் நாம் மாற்ற முடியாது. இனி வரும் ஆட்டங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.


BLACKCAPS captain: 3வது டி20யில் இருந்து அதிரடியாக விலகிய நியூசிலாந்து கேப்டன்: காரணம் இதுதான்!


மூன்று டி20 ஆட்டங்கள், 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


கேன் வில்லியம்சன் கருத்து


நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், "தற்போதைய தொடர் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆடம் மில்னே போன்ற வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் விளையாட்டை நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் எந்த அணியில் விளையாடினால் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.






நியூசிலாந்து இளம் வீரர்களுக்கு இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் கேன் வில்லியம்சன்.