இங்கிலாந்தில் கடந்தாண்டு இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடியது, இந்திய அணி முன்னிலை பெற்றிருந்த நிலையில், கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த போட்டியில் ஆடுவதற்காக ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி மீண்டும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது,


இந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி லீசெஸ்டர்ஷையர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, இந்தியாவின் இன்னிங்சை ரோகித்சர்மா – சுப்மன்கில் ஜோடி தொடங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்தனர்.




சுப்மன்கில் சற்று அதிரடியாக ஆடினர். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் வில்டேவிஸ் பந்தில் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அணியின் ஸ்கோர் 50 ஆக உயர்ந்த நிலையில் ரோகித்சர்மா அவுட்டாகினார். அவர் 47 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரோமன் வாக்கர் பந்தில் அவுட்டானார். இதையடுத்து, களமிறங்கிய ஹனுமா விஹாரி 3 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து, முன்னாள் கேப்டன் விராட்கோலி களமிறங்கினார்.


விராட்கோலி களமிறங்கிய முதல் பந்திலே பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் 11 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகினார். அடுத்து விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்காக களமிறங்கிய ஜடேஜா 13 பந்தில் 13 ரன்களுடன் அவுட்டாகினார். விராட்கோலியுடன் – ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.




இதையடுத்து, மீண்டும் ஆட்டம் தொடர்ந்த நிலையில் விராட்கோலி – ஸ்ரீகர்பரத் பொறுப்புடன் ஆடினர். 81 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் ஜோடி சேர்ந்த கோலி – பரத் இணையின் சிறப்பான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 138 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடி வந்த விராட்கோலி 69 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 33 ரன்களுடன் ரோமன் வாக்கர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி அவுட்டானார். இந்திய அணி தற்போது வரை 148 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. ஸ்ரீகர் பரத் – ஷர்துல் தாக்கூர் ஜோடி களத்தில் உள்ளனர். ரோமன் வாக்கர் தற்போது வரை சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண