ரோஹித் சர்மாவின் வாழ்வில் இன்று மிகவும் முக்கியமான நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கி பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். 2007 ஆம் ஆண்டு ஜூன், 23 ஆம் தேதி பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற்ற அயர்லாந்து எதிரான போட்டியில் தனது கிரிக்கெட் இன்னிங்சை தொடங்கினார்.
ஆரம்ப காலத்தில் பெரிதாக பேட்டிங் வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததில் தொடங்கி, சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என தற்போது ரோஹித் இல்லாமல் இந்திய அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக மாறியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் பேட்டிங், கேப்டன்சி உள்ளிட்டவற்றை இவரின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை.
தன் வாழ்வின் முக்கியமான நாளில், ரோஹித் தனது சமூக வலைதளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரோஹித் பதிவில், இன்று சர்வதேச கிரிக்கெட்டில் நான் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் என் கிரிக்கெட் பயணத்தை கொண்டாடுவேன். என் பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும், நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதற்கு உதவிய அனைவருக்கும் என் நன்றிகள். கிரிக்கெட் காதலர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை உரித்தாக்குகிறேன். இந்திய அணிக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கிவருபவர்களுக்கு என் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா இதுவரை மொத்தம் 230 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் 9,283 ரன்கள் குவித்துள்ளார். இதில் 44 அரை சதங்களும், 29 சதங்களும் அடங்கும்.
டி20-யில் 125 போட்டிகளில் விளையாடி 3,313 ரன்கள் எடுத்துள்ளார். 44 டெஸ்ட் போட்டிகளில் 3,076 ரன் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 அரை சதங்கள் மற்றும் 8 சதங்களையும் அடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடித்துள்ளார்.இன்னும் பல சாதனைகள் படைக்க ரோஹித் சர்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.