எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்தியாவை விட இங்கிலாந்து 132 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக, இரண்டாம் நாள் ஸ்கோருடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜானி பார்ஸ்டோ – பென்ஸ்டோக்ஸ் ஜோடி மிகவும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.
பும்ரா, ஷமி பந்து மிகவும் ஸ்விங் ஆகியதால் ஜானி பார்ஸ்டோ மிகவும் தடுமாறினார். பின்னர், களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவர் இந்திய பந்துவீச்சை நன்றாக சமாளித்த ஆடியதுடன் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கினார். மறுமுனையில் இருமுறை தப்பிப்பிழைத்த இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர், மறுமுனையில் சாம்பில்லிங்சுடன் ஜோடி சேர்ந்த ஜானி பார்ஸ்டோ அணியின் ஸ்கோரை விறுவிறுவென ஏற்றும் பணியில் இறங்கினார். சிறப்பாக ஆடிய ஜானி பார்ஸ்டோ தனது 11வது டெஸ்ட் சதத்தை விளாசினார். இந்த ஆண்டில் மட்டும் அவர் விளாசும் 5வது சதம் இதுவாகும். 149 ரன்களில் ஜோடி சேர்ந்த இந்த கூட்டணியை முகமது ஷமி பிரித்தார்.
அபாரமாக ஆடி சதமடித்த ஜானி பார்ஸ்டோ 140 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்ஸருடன் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜானி பார்ஸ்டோ – சாம் பில்லிங்ஸ் கூட்டணி 92 ரன்களை சேர்த்தனர். அவர் ஆட்டமிழந்த உடனே ஸ்டூவர்ட் பிராட் அவுட்டாகினார். சிறப்பாக ஆடிய சாம் பில்லிங்சும் சிராஜ் பந்தில் போல்டானார். இங்கிலாந்து இறுதியில் 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு அவுட்டாகியது.
சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி சற்றுமுன்வரை 1 விக்கெட் இழப்புக்கு 6 ரன்களை எடுத்துள்ளது. சுப்மன்கில் 4 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் அவுட்டானார்.
மேலும் படிக்க : IND vs ENG : அபார சதமடித்த ஜானிபார்ஸ்டோ அவுட்..! பறக்கும் முத்தம் கொடுத்து பை பை சொன்ன கோலி..!
மேலும் படிக்க : watch video : அப்பப்பா...! வேற லெவல் கேட்ச்! 2 முறை நழுவிய இங்கி கேப்டனை காலி செய்த இந்திய கேப்டன்.!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்