இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வரும் நிலையில் மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.






இந்திய அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணியின் இன்னிங்சை அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் கிராவ்லி தொடங்கினர். மழை விட்டு, விட்டு பெய்ததாலும் ஏற்கனவே இந்தியா முதல் இன்னிங்சில் ஆடியிருந்ததாலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. பேட்டிங்கில் கலக்கிய கேப்டன் பும்ராவும், ஷமியும் பந்துவீச்சில் அசத்தினர்.


பந்து நன்றாக ஸ்விங் ஆகி வருவதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். பும்ராவும், ஷமியும் லைன் மற்றும் லென்த்தில் அசத்தி வருவதால் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் மிகவும் தடுமாறினர். அணியின் ஸ்கோர் 16 ரன்களை எட்டியபோது அந்த அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ்லீஸ் 9 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டாகினார்.


 






அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் பும்ரா வீசிய அதற்கு அடுத்த ஓவரிலே மற்றொரு தொடக்க வீரரும் அவுட்டாகினார். ஜார்க் கிராவ்லி 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன்கில்லிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். இதையடுத்து, முன்னாள் கேப்டன் ஜோ ரூட்டும், ஒல்லி போப்பும் ஜோடி சேர்ந்தனர். அனுபவ வீரரான ஜோ ரூட்டும் பும்ரா, ஷமி பந்துவீச்சில் தடுமாறினர்.


இங்கிலாந்து அணி 6.3 ஓவர்கள் முடிவில் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து அணி இந்தியாவை காட்டிலும் 385 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண