இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி 416 ரன்களை குவித்துள்ளது. ரிஷப்பண்டுடன் அபாரமாக இணைந்து ஜோடி சேர்ந்து ஆடிய ஆல்ரவுண்டர் ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். கேப்டன் பும்ரா கடைசியில் 16 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார். தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது. இதன்படி, நேற்றைய ஆட்ட நேரப்படி இந்திய அணி ரிஷப்பண்டின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் ஜடேஜா பேட்டிங்கில்வேகம் காட்டினார். சிறப்பாக ஆடிய இந்திய ஆல்ரவுண்டனர் ஜடேஜா சதமடித்து அசத்தினார். ஜடேஜா டெஸ்ட் போட்டியில் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். ஷமி 16 ரன்களில் ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் 375 ரன்களை எட்டியபோது 104 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் போல்டானார். அவர் 194 பந்துகளில் 13 பவுண்டரியுடன் இந்த ரன்களை எடுத்தார்.
இதனால் இந்திய அணி 400 ரன்களை கடக்குமா? என்ற நிலையில் களமிறங்கிய கேப்டன் பும்ரா அதிரடியாக ஆடினார். அவரது அதிரடியால் இந்திய அணி 400 ரன்களை கடந்தது. இந்திய அணி கடைசியாக 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. கேப்டன் பும்ரா 16 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக, நேற்று இந்தியா 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ரிஷப்பண்ட் அற்புதமான சதம் அடித்து இந்தியா 300 ரன்களை கடக்க உதவினார். அவர் 111 பந்துகளில் 20 பவுண்டரி 4 சிக்ஸருடன் 146 ரன்களை விளாசினார்.
இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், பாட்ஸ் 2 விக்கெட்டுகளையும், ரூட், லீச், கேப்டன் ஸ்டோக்ஸ், பிராட் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்