இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்சுடன், முதன்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள பும்ரா களத்திற்குள் வந்தபோது இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, இந்திய அணியின் பேட்டிங்கை சுப்மன்கில்லுடன் சட்டீஸ்வர் புஜாரா தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே ரோகித்சர்மா விலகியதால் இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த சுப்மன்கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பண்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் என்று களமிறக்கி உள்ளனர். ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இரண்டாவது ஆல் ரவுண்டராக ஒரு வேகப்பந்துவீச்சாளரை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்காரணமாக, ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மிகவும் குடைச்சலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் இல்லாமல் இந்திய அணி களமிறங்கினாலும் இளம்வீரர்கள சுப்மன்கில், ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருடன் அனுபவ வீரர்கள் விராட்கோலி, புஜாரா, ஜடேஜா இருப்பதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கலாம். முதன்மை ஆல்ரவுண்டராக களமிறங்கியுள்ள ஜடேஜா சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்