இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையே 3 டி20போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இன்று முதல் 5வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டி வரும் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பின்னர் 7ஆம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. 


இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் டி20 போட்டிக்கு மட்டும்  டெஸ்ட் அணியிலுள்ள விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா,ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் அனைவருக்கும் முதல் டி20 போட்டிக்கு மட்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டி20 போட்டி முதல் இவர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 


முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.


இங்கிலாந்து-இந்தியா டி20 தொடர்:


ஜூலை 7-முதல் டி20-சவுதாம்ப்டன்


ஜூலை 9- இரண்டாவது டி20-பிர்மிங்ஹம்


ஜூலை 10- மூன்றாவது டி20-நாட்டிங்ஹம்


2வது மற்றும் 3வது டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்,விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா,  ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அவேஷ் கான், உம்ரான் மாலிக்.


இங்கிலாந்து இந்தியா ஒருநாள் தொடர்:


ஜூலை 12- முதல் ஒருநாள்- லண்டன்


ஜூலை 14- இரண்டாவது ஒருநாள்- லண்டன்


ஜூலை 17- மூன்றாவது ஒருநாள்- மான்செஸ்டர்


ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன்,விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர்,, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல்,ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண