இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. இதையடுத்து, இரு அணிகளும் மோதிய டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று பர்மிங்காமில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜாஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் அடித்தது. 


இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 46 ரன்களும், கேப்டன் ரோகித் 31 ரன்களும் எடுத்திருந்தனர். இங்கிலாந்து அணியில் ஜோர்டன் அதிகபட்சமாக 4 விக்கெட்களும், கீளிசன் 3 விக்கெட்களும் எடுத்திருந்தனர். 


171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவர் முதல் பந்தே இங்கிலாந்து தொடக்க வீரர் ராயை முட்டை ரன்களில் புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார். புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடி கொண்டிருந்த லிவிங்ஸ்டனை 15 ரன்களில் கிளீன் போல்ட் செய்தார் பும்ரா.


தொடர்ந்து ப்ரூக், டேவிட் மாலன் அவுட்டாக 10 வது ஓவரில் 5 விக்கெட்  இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. பும்ரா வீசிய 10 வது ஓவரில் சாம் கர்ரன் 2 ரன்களில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, 21 பந்துகளில் 35 ரன்கள் அடித்து அதிரடி காட்டிய மொயின் அலியை ஹர்திக் பாண்டியா அவுட்டாகினார். 


தொடர்ச்சியாக கிறிஸ் ஜோர்டன் 1 ரன்னில் ரன் அவுட் முறையில் வெளியேற, 15 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களுடன் இங்கிலாந்து அணி தடுமாறியது. பின் வரிசை பேட்ஸ்மேன்கள் கீளிசன் தன் பங்கிற்கு 2 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமார் பந்தில் வெளியேற, மறுமுனையில் டேவிட் வில்லி அதிரடியாக விளையாடி ரன் எடுத்து கொண்டு இருந்தார். 


ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 19 பந்துகளில் 50 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்சல் பட்டேல் பந்து வீசி பர்கின்சனை அவுட் செய்தார். இதன் மூலம் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2 - 0 என்ற முறையில் தொடரையும் கைப்பற்றியது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண