இந்தியா - வங்கதேசம் டி20:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த வகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி நேற்று கான்பூரில் தொடங்கியது. இந்த போட்டி மழையால் நிறுத்து வைக்கப்பட்டது. இச்சூழலில் நேற்று டி20 அணிக்கான இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்தது. 


இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியை எங்கே எப்படி பார்க்கலாம் என்பது தொடர்பான தகவலை இங்கே பார்ப்போம்:


போட்டி அட்டவணை:


முதல் போட்டி - அக்டோபர் 6, 2024 - மாதவராவ் சிந்தியா ஸ்டேடியம், குவாலியர் 


2வது போட்டி - அக்டோபர் 9, 2024 - அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி 


3வது போட்டி - அக்டோபர் 12, 2024 - ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்.


இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்?


இந்த தொடரின் மூன்று போட்டிகளும் மேற்கூறிய தேதிகளில் இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெறும். 6.30 மணிக்கு டாஸ் போடப்படும்.


இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பை எந்த தொலைக்காட்சி சேனலில் பார்ப்பது?


இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனல்களில் பார்க்கலாம்.


இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பை எந்த மொபைல் செயலி அல்லது இணையதளத்தில் பார்ப்பது?


இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பை ஸ்ட்ரீமிங் முறையில் ஜியோசினிமா மொபைல் செயலி அல்லது இணையதளத்தில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IPL 2025 New Rules: 2025 ஐபிஎல்.. ஏலம் முதல் சம்பளம் வரை - புதிய ரூல்ஸ் என்ன?


 


மேலும் படிக்க: Sunil Chhetri:"ஆல் ஏரியாவுலையும் அண்ணன் தான் மாஸ்" - ஐஎஸ்எல் வரலாற்றில் சுனில் சேத்ரி புதிய சாதனை!