வங்கதேச அணிக்கு எதிரான டி20 இந்திய வீரர்களை பிசிசிஐ இன்று (செப்டம்பர் 28) அறிவித்துள்ளது. இதில் கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அறிமுக வீரராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 


இந்தியா - வங்கதேசம்:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த வகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி நேற்று கான்பூரில் தொடங்கியது. இந்த போட்டி மழையால் நிறுத்து வைக்கப்பட்டது. 


மயங்க் யாதவ் அறிமுகம்:


இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 இந்திய வீரர்களை பிசிசிஐ இன்று (செப்டம்பர் 28) அறிவித்துள்ளது. இதில் கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அறிமுக வீரராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மற்றும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவிற்கும் பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இந்த டி20 போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான சஞ்சு சாம்சனுக்கும் டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி குவாலியரில் நடைபெற உள்ளது, மீதமுள்ள இரண்டு போட்டிகள் அக்டோபர் 9 ஆம் தேதி (புது டெல்லி) மற்றும் அக்டோபர் 12 ஆம் தேதி (ஹைதராபாத்) ஆகிய இடங்களில் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.


வங்கதேசத்துக்கு எதிரான இந்திய டி20 அணி:


சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.