IND vs AUS Final 2023: உலக கோப்பையை வெல்வது எப்படி? - இந்திய அணிக்கு சத்குரு கொடுத்த டிப்ஸ்!

IND vs AUS Final 2023: உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வரும் 19ஆம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் நரேந்திரமோடி மைதானத்தில் மோதவுள்ளது.

Continues below advertisement

உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்று பைனல்ஸுக்கு முன்னேறி உள்ளது நம் இந்திய கிரிக்கெட் அணி. நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தை காண ஒட்டுமொத்த தேசமும் ஆவலாக உள்ளது.

Continues below advertisement

இந்த சூழலில் உலக கோப்பையை இந்திய அணி மீண்டும் வெல்வதற்கு சத்குரு கொடுத்த டிப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்  “இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்வதற்கு நீங்கள் ஏதேனும் டிப்ஸ் வழங்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியை ஒருவர் சத்குருவிடம் கேட்கிறார்.

அதற்கு பதில் அளிக்கும் சத்குரு, “கிரிக்கெட் ஆடுவது எப்படி என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அதுகுறித்து நான் ஏன் எதாவது சொல்ல வேண்டும்?

ஆனால், இப்போது உலக கோப்பையை வெல்வது எப்படி என கேட்கிறீர்கள். கோப்பையை வெல்ல முயற்சிக்காதீர்கள். வெறுமனே அந்த பந்தை மட்டும் சிறப்பாக அடியுங்கள்.

இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களும் உலக கோப்பை வெல்ல வேண்டும் என ஏங்குகிறார்கள் என்ற எண்ணத்துடன் ஆடினால், நீங்கள் பந்தை தவறவிட்டுவிடுவீர்கள். அல்லது உலக கோப்பையை வென்றால் கிடைக்கும் விஷயங்கள் குறித்த கற்பனையுடன் ஆடினால் உங்கள் விக்கெட்டை  பறிகொடுத்துவிடுவீர்கள். எனவே, உலக கோப்பை எப்படி வெல்வது என சிந்திக்காதீர்கள். பந்தை எப்படி அடிப்பது, எதிர் அணியின் விக்கெட்களை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள்” என கூறியுள்ளார்.

Continues below advertisement