ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு, ஸ்டாண்ட்-இன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் போட்டி வருகின்ற நவம்பர் 23ம் தேதி (அதாவது நாளை) விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான இந்திய வீரர்கள் இந்தியா- ஆஸ்திரேலியா விளையாடும் டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக மேத்யூ வேட் கேப்டனாக செயல்படுகிறார்.
இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியா அணி:
மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்) (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடர் அட்டவணை:
நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் டி20 தொடர் விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கவுகாத்தி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து மைதானங்களில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு போட்டிக்கான தேதிகள் மற்றும் இடங்களின் பட்டியல் இங்கே.
- இந்தியா vs ஆஸ்திரேலியா 1வது டி20: நவம்பர் 23, விசாகப்பட்டினம்.
- இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டி20: நவம்பர் 26, திருவனந்தபுரம்
- இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டி20: நவம்பர் 28, கவுகாத்தி
- இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டி20: டிசம்பர் 1, நாக்பூர்
- இந்தியா - ஆஸ்திரேலியா 5வது டி20: டிசம்பர் 3,ஹைதராபாத்
இந்தியா vs ஆஸ்திரேலியா இதுவரை டி20யில் நேருக்கு நேர்:
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 26 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. 26 போட்டிகளில், இந்தியா 15 முறையும், ஆஸ்திரேலியா 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன, ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் முடிந்தது.
விளையாடிய மொத்த போட்டிகள்: 26
இந்தியா வென்றது: 15
ஆஸ்திரேலியா வென்றது: 10
முடிவு இல்லை: 1
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் எப்போது தொடங்குகிறது?
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 சர்வதேச தொடர் நவம்பர் 23, 2023 வியாழன் (நாளை முதல்) தொடங்குகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரின் போது எப்போது போட்டிகள் தொடங்கும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடர் எந்த டிவி சேனல் நேரடியாக செய்கிறது?