ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து மூன்று முக்கிய வீரர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தொடர் தோல்வியில் இந்திய அணி:


சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. மோசமான இந்த தோல்வி இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.


அதோபோல் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் முறையில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இச்சூழலில் தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


நீக்கப்படும் மூன்று முக்கிய வீரர்கள்:


இந்த நிலையில் தான் மூன்று முக்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டர் என்று தகவல்கள் கூறுகிறது. தனிப்பட்ட காரணங்களால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். அடுத்து சுழற் பந்துவீச்சாளர்  அஸ்வின் அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.


அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற உள்ளனர். அடுத்து நியூசிலாந்து தொடரில் 150 ரன்கள் அடித்த சர்ஃபராஸ் கானை அணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்கள் அடித்தாலும், அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் சரியாக ரன் சேர்க்கவில்லை.


அதோடு அனுபவ வீரர் கே.எல்.ராகுலை அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் சர்ஃபராஸ் கான் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார். சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக கே எல் ராகுலும், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரனும் அணியில் இடம் பெற உள்ளனர். அஸ்வின் இடத்தில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.