India vs Australia Live Stream:

  இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் தொடரை எடுத்துக்கொண்டால் அது மிகக் குறைவாகத்தான் இருக்கும். இந்நிலையில் இந்திய அணி வரும் 17ஆம் தேதிவரை இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பைத் தொடரினை முடித்துவிட்டு இந்தியா திரும்பவுள்ளது.


ஆசியக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இரு அணிகளுக்கும் உலகக்கோப்பைக்காக தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. வரும் 22ஆம் தேதி முதலாவது ஒருநாள் போட்டியும், 24ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், 27ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது. 




அதன்படி, முதலாவது ஒருநாள் போட்டி பஞ்சாப்பில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி இந்தூரில் உள்ள ஹொல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள சௌராஷ்ட்ரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கவுள்ளது. அதேபோல் மூன்று போட்டிகளும் உலகக்கோப்பைத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 12 மைதானங்களில் இல்லாமல் மற்ற மைதானங்களில் நடத்தப்படுகிறது. 






இந்நிலையில் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இந்தியாவில் நடக்கவுள்ள போட்டித் தொடர் என்பதால், இரு அணிகளும் உலகக்கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியுடன் தான் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த தொடர் முழுவதும் ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்தில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. அதேபோல் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் ஆங்கிலத்திலும், கலர்ஸ் சினிபிக்ஸ் சேனலில் ஹிந்தியிலும், கலர்ஸ் கன்னடா, கலர்ஸ் தமிழ் மற்றும் கலர்ஸ் பெங்காலி சேனலிலும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. 




உலகக்கோப்பைக்கான இந்திய அணி 


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றூம் முகமது ஷமி, 


உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி


 ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, ஆஷ்டன் அகர், ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட் , கேமரூன் கிரீன்.