Asia Cup, IND vs PAK: இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. 


இம்முறை ஆசிய கோப்பைத் தொடரில், தொடரை நடத்தும் அணிகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா, வங்காள தேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கியுள்ளன. இதில் நேபாளம் அணி முதல் முறையாக ஆசிய கோப்பைத் தொடரில் களம் காண்கிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடரில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது, இந்தியா பாகிஸ்தான் மோதல் தான். 




இந்தியாவும் பாகிஸ்தானும் சிறப்பாக  குரூப் சுற்று தொடங்கி சூப்பர் 4 போட்டி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதமுடியும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. இதில் ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குழு அளவிலான போட்டி மழையால் பாதிப்படைந்ததால் போட்டி முடிவு எட்டப்படாமலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.  இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி தொடக்கத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஃப்ரியிடின் தாக்குதலில் ஓப்பனிங் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். அதன் பின்னர் கைகோர்த்த மிடில் ஆட்ரர் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா மிகவும் பொறுப்பாக விளையாடி இந்திய அணியை கௌரவமான ஸ்கோரை எட்டவைத்தனர். இறுதியில் இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் அணி களமிறங்குவதற்கு முன்பாகவே கனமழை பெய்து ஆடுகளத்தின் அவுட் - ஃபீல்டில் மழைநீர் தேங்கியதால், போட்டி மேற்கொண்டு நடத்தப்படவில்லை. இதனால் போட்டி முடிவு இல்லாமல் முடித்துக்கொள்ளப்பட்டது. 




தொடர் தற்போது சூப்பர் 4 சுற்றினை எட்டியுள்ளதால், இன்னும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சுற்றிலும் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என வேண்டிக்கொண்டு உள்ளனர். 




இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் கேப்டனனுமான பாபர் அசாம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ”பாகிஸ்தான் அணி எப்போதும் ஒரு பெரிய ஆட்டத்திற்காக தயாராகத்தான் உள்ளது. இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் எங்களது 100%  திறனைக் காட்டுவோம்” என தெரிவித்துள்ளார். சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் பிரேமதேசா மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த போட்டியின் போதும் மழை குறிக்கிட வாய்ப்புள்ளதாக கூறபடுகிறது. 




ODI WC 2023: உலகக்கோப்பையில் மெய்டன் ஓவர் என்றால் சும்மாவா..! எந்த நாட்டு வீரர் இதில் முதல் இடம் தெரியுமா?


India vs Pakistan: பாகிஸ்தான்னு சொன்னாலே எங்களுக்கு பாயாசம் சாப்புடற மாதிரிதான்.. முன்னிலையில் ரோகித்- விராட்; என்னனு தெரியுமா?