ICC Mens World Cup 2023: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது, வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கவுள்ள உலகககோப்பைத் தொடருக்காகத்தான். இந்த தொடருக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மொத்தம் 12 மைதானங்களை மிகவும் மும்முரமாக தயாராகிக்கொண்டு உள்ளது. இந்திய மைதானங்கள் பொதுவாகவே பேட்டிங்கிற்கு சாதகமாகத்தான் இருக்கும். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்துக்கொண்டு இருக்கும் இந்த தொடரில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்தால் மட்டும்தான், ரசிகர்களை மேலும் மேலும் கவர முடியும் என்ற எண்ணத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக செயலாற்றி வருகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாகத்தான் இந்திய அணிக்கான தேர்வில் மூன்று சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என அதிகப்படியான பேட்ஸ்மேன்கள் என மொத்தம் 15 பேரை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
ஒருநாள் தொடர் என்றாலே இயல்பாகவே ஏதேனும் ஒரு சில ஓவர்கள் மெய்டனாக மாறிவிடும். பெரும்பாலும் போட்டியின் முதல் ஓவராகத்தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆடுகளத்தின் தன்மையை பேட்ஸ்மேன் தெரிந்து கொள்வதற்காக போட்டியின் முதல் ஓவர் செலவிடப்படும். ஆனால் அதேநேரத்தில் மிகவும் இக்கட்டான நேரத்தில் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அதிக மெய்டன் ஓவர்கள் வீசி, முதல் இடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி 9 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். மேலும் இந்த தொடரில் பும்ரா 18 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
உலகக் கோப்பையில் அதிக மெய்டன்கள் வீசியவர்கள் குறித்த விபரம்
உலகக்கோப்பை தொடர் | பந்து வீச்சாளர் | அணி | மெய்டன் ஓவர்கள் | இன்னிங்ஸ் | விக்கெட்டுகள் | சிறந்த இன்னிங்ஸ் |
1996-2007 |
கிளென் மெக்ராத் |
ஆஸ்திரேலியா |
42 | 39 | 71 | 7/15 |
1996-2007 |
சமிந்த வாஸ் |
இலங்கை | 39 | 31 | 49 | 6/25 |
1975-1983 | ரிச்சர்ட் ஹாட்லீ | நியூசிலாந்து | 38 | 13 | 22 | 5/25 |
1996-2007 |
ஷான் பொல்லாக் |
தென் ஆப்ரிக்கா | 37 | 31 | 31 | 5/36 |
1979-1992 |
இயான் போத்தாம் |
இங்கிலாந்து | 33 | 22 | 30 | 4/31 |
1987-1996 |
பில் டெஃப்ரிட்டாஷ் |
இங்கிலாந்து | 30 | 22 | 29 | 3/28 |
1975-1983 | சர் ஆண்டி ராபர்ட்ஸ் | வெஸ்ட் இண்டீஸ் | 29 | 16 | 26 | 3/32 |
1979-1992 | கபில் தேவ் | இந்தியா | 27 | 25 | 28 | 5/43 |
1979-1983 | பாப் வில்லிஸ் | இங்கிலாந்து | 27 | 11 | 18 | 4/11 |
1987-1999 | கோர்ட்டனி வால்ஸ் | வெஸ்ட் இண்டீஸ் | 23 | 17 | 27 | 4/25 |
அதேபோல் ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் ஷவுன் பொல்லாக் 313 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார். இவருக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ராத் மொத்தம் 279 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள இலங்கை அணியின் சமிந்த வாஸ் 279 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார். பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் 237 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார். ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் கபில் தேவ் 235 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார்.