டெல்லியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் வரும் வெள்ளிக்கிழமை முதல் அணியில் இணைவார் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 


பார்டர்- கவாஸ்கர் டிராபி 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 17 ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டிக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார். 


இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார், மேலும் பிசிசிஐ மருத்துவக் குழுவால் விடுவிக்கப்பட்டுள்ளார். பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான மாஸ்டர்கார்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக புதுதில்லியில் அணியுடன் ஷ்ரேயாஸ் இணைவார்.






ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சியாளர் எஸ் ரஜினிகாந்தின் மேற்பார்வையில் பயிற்சி பெற்று வந்தார். இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் இந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் டெல்லியில் தொடங்குகிறது. முன்னதாக விளையாடும் லெவன் அணியில் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்ற கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது. 


இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல். , குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்
 ஆஸ்திரேலியா:  பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.