இந்தூரில் 2 வது டி20 போட்டி:
இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்ற ஷிவம் துபே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில், இன்று மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.
சாதனைகள் படைக்க காத்திருக்கும் ஹிட்மேன்:
முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டி 20 தொடரில் எதிர்பார்ப்பு எகிறியதற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுகிறார்கள் என்பதால் தான். கடந்த 14 மாதங்களாக சர்வதேச டி 20 தொடர்களில் இருந்து ஒதுங்கி இருந்த இருவரும் இந்த தொடரில் இடம் பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
150 வது டி 20 போட்டி:
இதனிடையே கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற டி 20 போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்கினார். ஆனால், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரன் அவுட் முறையில் அவுட்டானார். அந்த வகையில் 149 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார் ரோகித் சர்மா.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் களமிறங்கும் போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் 134 போட்டிகளுடன் அதிக போட்டிகளில் விளையாடிய 2-வது வீரராக உள்ளார்.
தோனியின் சாதனையை முறியடிப்பாரா?
இது மட்டுமல்லாமல் அந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற எம்.எஸ்.தோனியின் சாதனையையும் ரோகித் சர்மா சமன் செய்வார்.
அதன்படி, எம்.எஸ்.தோனி இதுவரை டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக 41 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். தற்போது ரோகித் சர்மா தலைமையில் 40 டி 20 போட்டிகளை இந்திய அணி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் தான் இன்று நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா இந்த சாதனைகளை எல்லாம் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: Virat Kohli: விராட் கோலியை யார் என்று கேட்ட ரொனால்டோ! ரசிகர்கள் ஷாக்... வீடியோ உள்ளே!
மேலும் படிக்க: Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி... அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!