தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு செல்லும் முன் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, மும்பையில் நடந்த பயிற்சியின் போது காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


‘கேப்டன் ரோகித் தனது அணி வீரர்களான அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் மதியம் ஷரத் பவார் அகாடமியில் நெட்ஸில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.


இந்த பயிற்சியின் போது, ​​இந்தியாவின் த்ரோ-டவுன் ஸ்பெஷலிஸ்ட் ரகுவேந்திரா வீசிய பந்தை ரோகித் ஷர்மாவின் கையில் பட்டது. அதன் பிறகு ரோகித் மிகவும் வேதனைப்பட்டார்’ என்று இன்சைட் ஸ்போர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் ரோகித்தின் காயம் குறித்து பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.


ரோகித் சர்மா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர்  தீவிர பேட்டிங் பயிற்சி செய்வதைக் காணலாம். இந்த பயிற்சியின்போது, ​​ரோகித் பவுன்ஸ் பந்துகளை எதிர்கொண்டார். தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து  எதிர்கொள்ளக்கூடிய வகையில் பவுன்ஸ் பந்துகள் வீசப்பட்டது. தென்னாப்பிரிக்க மண்ணில் ரோகித் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்சியில் ஈடுபட்டது போல் தெரிகிறது.






 


இந்திய அணி டிசம்பர் 16ஆம் தேதி மும்பையில் இருந்து தென்னாப்பிரிக்கா செல்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஓமிக்ரானின் அச்சுறுத்தல் காரணமாக, தொடர் பயோ-பப்பில் அணி இருக்கும். இந்தியா - தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட்  டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் மைதானத்தில் தொடங்குகிறது.


தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், மயங்க் அகர்வால்,  புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (WK), விருத்திமான் சாஹா (WK), ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.


காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்ஜன் நாக்வாஸ்வாலா.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண