ஹிட் மேன் என்ற ரோஹித் சர்மா...இரட்டை சதம் இவருக்கு சர்வ சாதாரணம். இதுவரை பல உலக கிரிக்கெட் வீரர்கள் ஒரு முறையேனும் சதம் அடித்து தன் கைகளில் உள்ள பேட்டை உயர்த்தி நானும் சதம் அடித்துவிட்டேன் என்று அனைவரும் அறிய வேண்டும் என்று ஆசை கொள்வர். அட போங்கப்பா.. இதல்லாம் எனக்கு தூசு.. ஒன்டே போட்டில டபுள் சதம் அடிக்குறதுல நான் தான்டா மாஸ் என்று எதிரணி பௌலர்களை எளிதாக எதிர்கொள்வார்.
2013 ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை எதிர்கொள்ள இந்தியா வந்தது. பெங்களூரில் நடந்த அந்த ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா ஆடிய வெறியாட்டம் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க முடியாத ஒன்று. 158 பந்துகளில் 209 ரன்கள் குவித்து தனது முதல் இரட்டை சதமாகும். ஆஸ்திரேலியா வீரர் பால்குனர் பந்தில் பந்து வானம் பறந்து ஐயோ சாமி விட்டுருங்கனு கதறுச்சு..
அதனைத்தொடர்ந்து, அதற்கு அடுத்த வருடமான 2014 ல் இலங்கை அணிக்கு எதிராக 173 பந்துகளில் 264 ரன்களை குவித்தார். இந்த போட்டியை அப்புறமா பார்த்துக்கலாம்ப்பா என்று நினைத்து தூங்கிய இந்திய ரசிகர்களுக்கு அது ஒரு துக்க நாளாக தான் இருக்கும். மனிசன் அடிச்ச அடி ஒன்னும் சரவெடி.. பௌலர்கள் போட்ட ஒரு பந்தும் பீல்டிங் செய்ய வீரர்கள்ட்ட போகவே இல்ல. எல்லாம் பார்வையாளர்கள் கூட்டத்தை பதம் பார்த்தது.
அதோட விட்டாரா ஹிட் மேன்னு, இதே இலங்கை டீம், இதே இன்றை நாள்.. வருஷம் மட்டும் 2017.. ரோகித் சர்மா அன்றைய போட்டியில் 153 பந்தில் 12 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் விளாசி 208 ரன்களை குவித்தார். இது இவருக்கு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 3வது இரட்டை சதமாகும். இன்றைய நாளில் இவர் அடித்த 3 வது இரட்டை சதத்தை அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக, உலககோப்பை டி20 தொடருடன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்திய ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலியை பி.சி.சி.ஐ. நீக்கியது. இவருக்கு பதிலாக புதிய இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்