டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஜூலை 22-ம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டார்.


வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் முகமது ஷமி ஆகியோர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். 


ஷிகர் தவான் தலைமையிலான அணியில் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ், கில், ஹூடா, சூர்யாகுமார் யாதவ், ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சாம்சன், அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், ப்ரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


 






இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது. ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு, கரீபியன் மற்றும் அமெரிக்காவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது, அதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.






3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:


ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர். யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண