இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக இந்திய அணிக்கு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. 


அதன்படி இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்காரண்மாக இங்கிலாந்து போட்டி தோல்விக்கு பிறகு மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது 52.08 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 52.38 புள்ளிகளுடன் இந்தியாவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.


இந்தியாவின் வெற்றி சதவிகிதம் 58.33 புள்ளிகளிலிருந்து தற்போது 52.08 ஆக குறைந்துள்ளது. இந்திய அணி தற்போது 4வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 77.78% வெற்றி சதவிகிதத்துடன் ஆஸ்திரேலியா உள்ளது. இரண்டாவது இடத்தில் 71.43 வெற்றி சதவிகிதத்துடன் தென்னாப்பிரிக்கா உள்ளது. 




உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி செல்ல இந்தியா செய்ய வேண்டியது?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் சிறப்பான வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இந்திய அணி அடுத்து பங்களாதேஷ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டியது மிகவும் கட்டாயமான ஒன்று. அப்படி இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெரும். 


தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்தாண்டு இறுதியில் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. ஆகவே அந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி செல்வதை உறுதியாக்கிவிடும் என்று கருதப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண