டி20 உலகக் கோப்பை:


ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 20) நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. 


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தவகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ரோஹித் ஷர்மா 13 பந்துகள் களத்தில் நின்று 8 ரன்களில் நடையைக் கட்டினார். அப்போது களத்திற்கு வந்தார் ரிஷப் பண்ட். கோலி மற்றும் பண்ட் ஜோடி நிதானமாக விளையாடியது. இதனிடையே ரிஷப் பண்ட் விக்கெட்டை பறிகொடுத்தார். 11 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் விளாசி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.


சூர்யகுமார் யாதவ் அரைசதம்:


பின்னர் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். அப்போது விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார். 24 பந்துகள் களத்தில் நின்ற அவர் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே ஷிவம் துபே 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார்.மறுபுறம் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.




சூர்யகுமார் யாதவ் மொத்தம் 28 பந்துகள் களத்தில் நின்று 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக் ஸர்கள் உட்பட மொத்தம் 53 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 32 ரன்கல் எடுத்தார். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.