இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை லீக் சுற்றுக்கான போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற உள்ளது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கடும் எதிர்பார்ப்புக்கிடையில் இந்த போட்டிகள் மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளன. மழை விலகி ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழையும் புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதனால் இந்த போட்டி நடைபெறுவதில் தடங்கல்கள் ஏதும் இருக்காது என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த பரபரப்பான போட்டிக்கு முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல முக்கிய தகவல்கள் உள்ளன.  இந்திய அணி 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் ஃபார்மட்டில் உலகக்கோப்பை தொடங்கிய முதல் தொடரில் வென்று காண்பித்தது. பல அணிகளுக்கு 20 ஓவர் ஃபார்மட்டிற்கு எப்படி வியூகம் வகுப்பது என்று தெரியாமல் இருந்த நிலையில், தோனி கப்பை வென்று உலகிற்கு பாடம் எடுத்தார்.



முதல் வெற்றி


2007 உலகக்கோப்பையை தொடர்ந்து நடந்த இந்த உலகக்கோப்பையையும் திரும்ப இந்தியா வெல்லாததால் எல்லா வருடமும் இந்தியா மீது உலக கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்பார்ப்பை வைப்பார்கள். அதே போல ஒரு தொடரை தொடங்குவதற்கு முதல் போட்டி முக்கிய காரணமாகும். அதுவே அணி வீரர்கள் இடையே நம்பிக்கையை அதிகப்படுத்தும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று கூறுவார்கள். அப்படி ஆகி விடாமல் இருக்க முதல் போட்டியை வெற்றியுடன் துவங்க வேண்டும் என்றே எல்லா அணிகளும் எண்ணுவார்கள்.


தொடர்புடைய செயதிகள்: IND vs PAK T20 World cup: மழை கருணை காட்டுமா..? இந்தியா - பாகிஸ்தான் அணி இன்று மோதல்.. யாருக்கு வெற்றி.?


இம்முறை வெல்லுமா?


இம்முறை பாகிஸ்தான் அணியை வென்று இந்த உலகக்கோப்பையை வெற்றியுடன் துவங்கவும், இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு அளிக்கவும் இந்திய அணி காத்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை துவங்கிய போது இந்திய அணி ஸ்காட்லாந்துடன் முதல் போட்டியை துவங்கியது. ஆனால் டர்பனில் நடந்த அந்த போட்டி மழையால் ஆடாமல் கை விடப்பட்டது. அதே போல இந்த வருடமும் மழை எச்சரிக்கை இருந்ததால், போட்டி நின்றால் கப் நமக்குத்தான் என்றனர் கிரிக்கெட் ஜிங்க்ஸை நம்பும் ரசிகர்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு இனிமேல் இருக்காது என்றே தெரிகிறது.



வரலாறு என்ன சொல்கிறது?


அடுத்தடுத்த டி20 உலகக்கோப்பைகளில் எப்போதுமே இந்தியா முதல் போட்டியை வெற்றியுடன் தான் துவங்கியது. 2009இல் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில், வங்கதேசத்தையும், 2010லும், 2012லும் ஆப்கனிஸ்தானையும், அதன் பிறகு 2014ல் பாகிஸ்தானையும் வென்றிருந்தது. 2016இல் முதன் முறையாக டி20 உலகக்கோப்பைகளில் முதல் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு 2018இல் எல்லா அணிகளும் பிசியாக இருந்ததால் உலகக்கோப்பை நடைபெறவில்லை. 2020 இல் நடக்க வேண்டிய உலகக்கோப்பை 2021 இல் நடைபெற்றது, அதில் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் முதன் முறையாக தோல்வியை சந்தித்தது. கடைசி இரண்டு முறை இந்தியா முதல் போட்டியில் தோல்வியவ் சந்தித்துள்ளது, எனவே இம்முறை வெற்றி பெற வேண்டியமுழுமையாக நடைபெற்ற ஆறு போட்டிகளில் மூன்றில் இந்தியா முதலில் பேட் செய்தது, அதில் இரண்டில் வென்றுள்ளது. மீதமுள்ள மூன்றில் இந்தியா இரண்டாவதாக பேட் செய்தது, அதிலும் இரண்டில் வெற்றியும் ஒன்றில் தோவியும் சந்தித்துள்ளது. எனவே இந்த போட்டியில் டாஸ் வென்றால் வரலாற்றை வைத்து ரோகித் சர்மா முடிவு செய்ய மாட்டார், மெல்போர்ன் மைதானத்தின் தன்மை மற்றும் காலநிலை சூழ்நிலைகள் பொறுத்து தேர்வு செய்வார். 


டி20 உலகக்கோப்பைகளில் இந்தியாவை. முதல் போட்டி முடிவுகள்


2007: ஸ்காட்லாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது (டர்பன்)


2009: வங்கதேசத்தை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது (நாட்டிங்ஹாம்)


2010: ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது (Gros Islet)


2012: ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது (கொழும்பு)


2014: பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது (மிர்பூர்)


2016: நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (நாக்பூர்)


2021: பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி (துபாய்)