மூன்று ஓருநாள் கிரிக்கெட் போட்டி விளையாட வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிற்க்கு வந்துள்ளது. இதன் முதல் போட்டியில் வங்கதேசம் அணி இந்திய அணியை வீழ்த்தி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் வங்கதேச அணி முன்னிலையில் உள்ளது.




நேற்று ஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியத்தில் இந்திய அணிக்கும் வங்கதேச அணிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணி முதல் போட்டியில் அபாரமான தோல்வியை சந்தித்தால் இந்த போட்டியில் இரு வீரர்களை மாற்றியது. பரேட்டி அனுஷா, பூஜா வஸ்ட்ராகர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்லீன் தியோஸ், மேக்னா சிங் அணியில் சேர்க்கப்பட்டனர்.


முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா


இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரியா புனியா களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 7 ரன்களுடன் பிரியா புனியா மருபா அக்தர் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்மன்பிரீத் கவுர் சற்று நிதானமாக ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டுவந்தார். நிதானமாக ஆடி வந்த ஸ்மிருதி மந்தனா 36 ரன்களில்  ராபியா கானிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து சென்றார்.


பங்கிலாதேஷ் பந்தை பறக்கவிட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ்




ஸ்மிருதி மந்தனாவுக்கு பின்னர் ஹர்மன்பிரீத் கவுருடன் கைகோர்த்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இருவரும் அதிரடியாக ஆட்டத்தை ஆட ஆரம்பித்தனர். வங்கதேச பந்துவீச்சாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இருவரும் அடுத்தடுத்து அரை சதம் விளாச அணியின் ரன் சரசரவென உயர்ந்தது. இருவரின் பார்ட்னர்ஷிப்131 ரன்களை எட்டிய போது ஹர்லீன் தியோல் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்தது.


வங்கதேச வீரர்களை வந்த வேகத்தில் திருப்பி அனுப்பிய இந்திய அணி


229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வங்கதேச அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த முர்ஷிதா காதுன், ஷர்மின் அக்தர்  சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. முர்ஷிதா காதுன்(12), ஷர்மின் அக்தர் (2) ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்தவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கண்ணுக்கு எதிரே வந்தது. 35.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேசம். இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது.