India cricket Team schedule 2024: நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள தொடர்களின்  விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


இந்திய கிரிக்கெட் அணி:


கடந்த 2023ம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல தவறினாலும், மற்றபடி சிறப்பாகவே செயல்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுப்பயணங்களிலும் வெற்றியை குவித்தது. ஆசியக்கோப்பையை வென்றது. கிரிக்கெட் உலகில் நிகழ்த்துவதற்கு அரிதான பல சாதனைகளை கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி படைத்தது. இந்நிலையில், நடப்பாண்டில் இந்திய அணி எந்தெந்த நாடுகளுடன் விளையாட உள்ளது. எப்போது எந்த போட்டிகள் நடைபெறும் என்ற விவரத்தை இந்த தொகுப்பில் அறியலாம்.


இந்திய ஆடவர் அணி விளையாட உள்ள போட்டிகள்:



  • ஜனவரி 3-7, கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி

  • ஜனவரி 11-17, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3-போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுகிறது

  • ஜனவரி 19ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவில் ICC U19 உலகக் கோப்பை நடைபெற உள்ளது

  • ஜனவரி 25-மார்ச் 11, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. (போட்டி நடைபெறும் இடங்கள்: ஐதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தர்மசாலா)

  • மார்ச்-ஜூன் காலகட்டத்தில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன

  • ஜூன் 4ம் தேதி தொடங்குஇ 30ம் தேதி வரையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

  • ஜுலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாட உள்ளன. (தேதிகள் அறிவிக்கப்படவில்லை)

  • செப்டம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது (தேதிகள் அறிவிக்கப்படும்)

  • அக்டோபரில் உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது (தேதிகள் அறிவிக்கப்படும்)

  • நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.


இந்திய மகளிர் அணி விளையாட உள்ள போட்டிகள்:



  • ஜனவரி 2ம் தேதி மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது

  • ஜனவரி 5-9, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்ளூரில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது

  • செப்டம்பர் மாதத்தில் வங்கதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்க உள்ளது

  • டிசம்பர் மாதம் உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது