IND W  Vs PAK W WC 2025:  ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், இலங்கையில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் மோத உள்ளன.

Continues below advertisement

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்று இந்த போட்டியை இந்தியா மற்று இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இந்த போட்டியானது பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

Continues below advertisement

இந்தியா Vs பாகிஸ்தான் - நிலவரம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லை பதற்றத்தை ஆடுகளத்திலும் உணர முடிகிறது. அதற்கு உதாரணமாக தான் ஆசியக் கோப்பை போட்டி அமைந்தது. அதே உணர்ச்சிப் பெருக்கை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இடையேயான இன்றைய போட்டியிலும் எதிர்பார்க்கலாம். ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணி விளையாடிய முதல் லீக் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தியது. அதே வெற்றியை இன்றைய போட்டியிலும் தொடர தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், ஃபாதிமா சனா அணி விளையாடிய முதல் லீக் போட்டியில், வங்கதேச அணியிடம் மோசமான தோல்வியை எதிர்கொண்டது. இதனால், இன்றைய போட்டியின் மூலம், லீகின் முதல் வெற்றியை பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறது. இதன் மூலம், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா Vs பாகிஸ்தான் - பலம், பலவீனம்:

இந்திய அணி தனது முதல் போட்டியில் பேட்டிங்கில் சற்றே தடுமாறினாலும், நடுகள வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனை உணர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருந்தி மந்தனா மற்றும் ப்ரதிகா ராவல் ஆகியோர் நல்ல தொடக்கத்தை வழங்க வேண்டியது அவசியம். மறுமுனையில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெறும் 129 ரன்களுக்கே ஆல்-அவுட்டானது. எனவே அணி தனது பேட்டிங்கில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்தியா Vs பாகிஸ்தான்- நேருக்கு நேர்

இரு அணிகளும் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணி, முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

மைதானம் எப்படி?

பிரேமதாஸா மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான ஆடுகளம் ஆகும்.பல அதிகபட்ச ஸ்கோர்களை குவித்த போட்டிகளை இந்த மைதானம் கண்டுள்ளது. ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நேரம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களும் பேட்டிங்கிற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

உத்தேச பிளேயிங் லெவன்:

இந்தியா: ப்ரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ்(வி.கீ), தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர், ஸ்னே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி

பாகிஸ்தான்: முனீபா அலி, ஒமைமா சோஹைல், சித்ரா அமின், அலியா ரியாஸ், சித்ரா நவாஸ்(வ), நடாலியா பெர்வைஸ், பாத்திமா சனா(சி), ரமீன் ஷமிம், நஷ்ரா சந்து, டயானா பைக், சாடியா இக்பால்