டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது.  நெதர்லாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்திய அணி தாமாகவே அரையிறுதிக்கு தகுதி பெற்றது.


அதனால், முன்பு இருந்ததுபோல் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழல் இல்லை. ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய ஆட்டம் சம்பிரதாய ஆட்டமே. இருப்பினும், உலகக் கோப்பைத் தொடரில் இரு அணிகளும் மோதும் முதல் ஆட்டம் இதுதான் என்பதால் இரு அணிகளுமே வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறது.


இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.


இதையடுத்து, முதலில் விளையாடிய இந்தியா 186 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் அரை சதம் விளாசினார். கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, தொடர்ந்து கடந்த சில ஆட்டங்களில் அதிரடி காட்டிய  விராட் கோலி இந்த ஆட்டத்தில் 26 ரன்களில் நடையைக் கட்டினார்.




விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் வந்தவேகத்தில் சான் வில்லியம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  பினனர் களம் புகுந்து சூர்யகுமார் யாதவும், ஹார்திக் பாண்டியாவும் அடித்து விளையாடினர்.நசூர்ய குமார் யாதவ் வாண வேடிக்கை காண்பித்தார். அவர் இந்த ஆட்டத்தில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் சான் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


 


அரையிறுதியில் பாகிஸ்தான்


முன்னதாக, அடிலெய்டில் இன்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்திாயசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். கடந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி அரைசதம் கடந்த லிட்டன் தாஸ், இந்த போட்டியில் வெறும் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த செளமியா சர்கார் 20 ரன்களில் வெளியேற, பின்னால் வந்த வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹாசனும் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். மறுபுறம் நங்கூரம் போல் நச்சென்று நின்ற நஜ்முல் ஹொசைன் சாண்டோ 78 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து இப்டிகர் அகமது வீசிய 14 வது ஓவரில் க்ளீன் போல்டானார். 


அடுத்து களம் கண்ட அஃபிஃப் ஹொசைன் மட்டும் ஓரளவு தாக்குபிடித்து 24 ரன்கள் அடித்து ஆதர்வு அளித்தார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்களும், சதாப் கான் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.


இதையடுத்து, விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.