IND vs ZIM 2nd ODI : இந்தியாவுக்கு 25 னா.. பாகிஸ்தானுக்கு 50 ஓவர் தேவை.. ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த பாக்.வீரர்!
162 ரன்களை எடுக்க இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்ததாகக் கூறி, பல பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியை செயல்பாட்டை கேலி செய்து வந்தனர்.

ஜிம்பாவே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
62 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல், நியாட்சி வீசிய 2வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் 1 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 21 பந்துகளில் 33 ரன்கள் அடித்து நடையைகட்ட, கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லும் 33 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களம் கண்ட இஷான் கிஷன் 6 ரன்களுடன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் இந்திய அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்து சற்று தடுமாறியது. தீபக் ஹுடாவுடன் இணைந்த சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி ஜிம்பாவே அணியின் விக்கெட் வேட்டையை தடுக்க தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹுடா 25 ரன்களில் வெளியேற, பொறுமையுடன் விளையாடிய சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து 25. 4 ஓவர்களில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.
ஜிம்பாப்வேயில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. 162 ரன்களை எடுக்க இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்ததாகக் கூறி, பல பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியை செயல்பாட்டை கேலி செய்து வந்தனர்.
இந்த நிலையில் இலக்கை எட்டி முடிக்க இந்தியா அணிக்கு 25 ஓவர்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இதுவே அந்த இடத்தில் பாகிஸ்தான் அதைத் துரத்த 50 ஓவர்கள் எடுத்திருக்கும்,” என்று கனேரியா தனது சமீபத்திய யூடியூப் வீடியோவில் பேட்டியளித்து பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், ஷாஹீன் அப்ரிடியின் காயத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டினார். ஆசிய கோப்பை 2022ல் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் நீக்கப்பட்டதற்கு பிசிபி தான் முக்கிய காரணம். இலங்கை தொடரில் அவருக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும். பல போட்டிகளில் தொடர்ந்து அவரை விளையாட வைத்ததன் பரிசுதான் இது” என்று குறிப்பிட்டார்.