IND vs WI, T20 Series: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர்... காயம் காரணமாக கே.எல்.ராகுல்,அக்சர் படேல் விலகல்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து துணை கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் ஆகியோர் விலகியுள்ளனர்.

Continues below advertisement

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, தற்போது 3 வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. 

Continues below advertisement

இந்தநிலையில், பிப்ரவரி 16, 2022 முதல் கொல்கத்தாவில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து துணை கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் ஆகியோர் விலகியுள்ளனர்.

பிப்ரவரி 9, 2022 அன்று நடந்த 2 வது ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின் போது ராகுலுக்கு மேல் இடது தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதேபோல், அக்சர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து தற்போது மீண்டுள்ளார். இந்தநிலையில், அவர்கள் இருவர்களும் இப்போது தங்கள் காயத்தில் இருந்து மீள்வதற்காகவும், உடல் நிலை தகுதியை நிரூப்பிக்கவும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல இருக்கின்றனர்.

இதையடுத்து, துணை கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேலுக்கு பதிலாக அகில இந்திய மூத்த தேர்வுக் குழு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரை மாற்று வீரர்களாக நியமித்துள்ளது.

இந்திய டி20 அணி விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், வாஷிங்டன் சுந்தர். . சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement