வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) விளையாடுவார் என கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.


இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 12) தொடங்குகிறது. இந்தப் போட்டி டொமினிகாவில் நடக்கிறது. இதற்கான ப்ளேயின் லெவனில் தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில், சுப்மான் கில்-லுக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மாவுடன் ஓப்பராக களம் இறங்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு,சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக யாஷ்வி ஜெய்ஸ்வால் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார்.


யாஷ்வி ஜெய்ஸ்வால்


உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேந்த யாஷ்வி ஜெய்ஸ்வால், 2020-ல் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். சாதாரண குடும்ப பிண்ணனியில் இருந்து கடுமையாக உழைத்து கிரிக்கெட் பயிற்சி பெற்றிருக்கிறார். இளம் வயதில் கிரிக்கெட் பயிற்சிற்க்கு நேரத்திற்கு பிறகு, பானி பூரி விற்பனை செய்யும் பணி செய்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு, கடுமையாக நாட்களை சந்தித்துள்ளார். மும்பை கிரிக்கெட் க்ளப் நிறுவனர், கிரிக்கெட் பயிற்சியாளர் ஜவாலா சிங், ஜெய்ஸ்வால் திறமையாக கிரிக்கெட் விளையாடுவதை கண்டுள்ளார். அவருக்கு பயிற்சி அளித்துள்ளார்.


2018-ஆம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் ஆசிய கோப்பையில், நான்கு போட்டிகளில் 318 ரன் எடுத்து அசத்தினார். விஜய்-ஹசாரே ட்ராபியில் இரட்டை சதம் அடித்தார். 19-வயது உட்பட்டோருக்கான இந்திய அணியின் 2020 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 108 ரன் அடித்து, இரண்டு முக்கியமான விக்கெட்களை கைப்பற்றினார்.


நேருக்குநேர்: 


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே 98 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 22 முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 30 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்திய அணியை விட வெற்றி அடிப்படையில் முன்னிலை வகித்து வருகிறது. 


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:


கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சார்ரி ஜோசப், கிர்க் மெக்மார்க்மன் ரெசிபர், கிர்க் மெக்மர் ரோச், ஜோமெல் வாரிக்கன்.


வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: 


ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.