இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸூக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் தவான் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்தெடுத்தது. அதன் அடிப்படையில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.
இந்த அரைசதம் அடித்ததன் மூலம் இரண்டு முத்தான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. நேற்றைய போட்டியில் 50 ஐ கடந்த ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக 50-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி முதலிடத்தில் உள்ளார்.
விராட் கோலி 30 அரைசதத்துக்கு மேல் ஸ்கோருடன் இரண்டாவது இடத்திலும், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 27 அரை சதங்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்திலும் உள்ளனர். கோஹ்லி டி20 போட்டியில் சதம் அடிக்கவில்லை. தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், டி20யில் ஒரு சதம் உட்பட 27 ஐம்பது பிளஸ் ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்