வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.
இந்த வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 13வது முறையாக இருதரப்பு ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இதன் மூலம், ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து அதிகமுறை இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
இந்த உலக சாதனையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. கடந்த 1996 முதல் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து 11 முறை ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அதே நேரத்தில், இந்திய அணி 2007ம் ஆண்டு முதல் தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி 6 முறையும், தனது சொந்த மண்ணில் 7 முறையும் வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான கடைசி 10 ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்கவில்லை. 2007-ம் ஆண்டு தொடங்கிய இந்தத் தொடரை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் எதிரான கடந்த 10 இருதரப்பு ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:
கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போட்டியில் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவும், அம்பதி ராயுடுவும் அபார சதம் அடித்தனர். ரோஹித் 137 பந்துகளில் 162 ரன்கள் எடுத்தார். ராயுடு 81 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 377 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 153 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
பிரையன் லாரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரன்கள் அடிப்படையில் இது இரண்டாவது பெரிய வெற்றியாகும். இதே வரிசையில் இந்திய அணி 2007ல் வெஸ்ட் இண்டீஸ் அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது வதோதராவில் நடந்த போட்டியில் இந்திய அணி பெற்ற மூன்றாவது பெரிய வெற்றியாகும். மேலும் 2011ல் இந்தூர் ஒருநாள் போட்டியில் 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரன் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பெற்ற நான்காவது மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
டி20 தொடர்:
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி டிரினிடாட்டில் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறவுள்ளது.