இந்தியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து டி20 தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 64 ரன்கள் அடித்து அசத்தினார்.


இந்நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியை போல் இம்முறையும் சூர்ய குமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நிலையில் இதற்கான தயாரிப்பிறாக வெஸ்ட் இண்டீஸ் தொடரை இந்திய அணி பார்த்து வருகிறது. 


 






இந்தச் சூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் சொதப்பியுள்ளதால் அவருக்கு பதிலாக இந்தப் போட்டியில் தீபக் ஹூடா சேர்க்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. மேலும் இன்றைய போட்டியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அஸ்வின் அல்லது பிஷ்னோய் ஆகிய இருவரில் ஒருவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. 


வேகபந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஹர்ஷல் பட்டேல் இந்தப் போட்டியில் விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியின் வீரர்கள் தேர்விற்கு மிகவும் முக்கியமானதாக அமையும் என்று கருதப்படுக்கிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண