இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம், இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. 


இந்த வெற்றியின் மூலம், இருதரப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது இதுவே முதல்முறை. முன்னதாக, ஜூன் 2009 (7 விக்கெட்டுகள்) மற்றும் மே 2010 (14 ரன்கள்), மார்ச் 2016 (7 விக்கெட்டுகள்) மற்றும் ஆகஸ்ட் 2016 (1 ரன்). இந்த இரண்டு தோல்விகளும் எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் வந்தவை. ஆனால், இவைகள் இரண்டும் இடைப்பட்ட ஆண்டுகள் மற்றும் நாட்களுக்கு இடையில் நடந்த போட்டியாகும். கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. 






போட்டி சுருக்கம்: 


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், பேட்டிங் செய்த இந்திய அணி, திலக் வர்மாவின் முதல் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுப்மன் கில் 7, சூர்யகுமார் யாதவ் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினர். அதே சமயம் இஷான் கிஷனால் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 


வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






இன்னிங்ஸின் முதல் பந்திலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிராண்டன் கிங்கிற்கு பெவிலியன் கொடுத்தார் ஹர்திக். இதன்பிறகு, அந்த ஓவரின் நான்காவது பந்தில், திலக் வர்மாவிடம் ஜான்சன் சார்லஸ் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெஸ்ட் விண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஹர்திக் பாண்டியா.


இதையும் படிங்க..


Mammootty Birthday : மம்மூக்கா.. எப்போதும் ரசிகர்களின் செல்லம்.. நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று


புவனேஷ்வர் குமாருக்குப் பிறகு, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஹர்திக் பெற்றுள்ளார். நிக்கோலஸ் பூரன் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 


இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களும், சாஹல் 2 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்களும் வீழ்த்தியிருந்தனர்.