இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி நாளை மறுநாள் கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. 


இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வேறு மாற்று வீரர் யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை என்று தெரிகிறது. ஏற்கெனவே இந்திய அணியில் தீபக் ஹூடா மற்றும் வெங்கடேஷ் ஐயர் உள்ளதால் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை என்று தெரிகிறது. 


 






முன்னதாக இன்று இந்திய வீரர்கள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வலை பயிற்சியை தொடங்கினர். டி20 தொடரில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக விலகினர். அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் அணியில் இல்லாததால் ரோகித் சர்மாவுடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுடன் ரிஷப் பண்ட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆனால் டி20 தொடரில் இஷான் கிஷன் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: கோலிக்கு தன்னம்பிக்கை வேணுமா? பத்திரிகையாளருக்கு ரோஹித் ஷர்மா சொன்ன பதில்...