டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. நேற்று இரவு நடைபெற்ற 5வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இதன்மூலம், ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷியில் மூன்று மோசமாக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. 


7 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி: 


ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் 2016ல் கரீபியன் அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. அதே நேரத்தில், ஐந்தாவது டி20 தோல்வியுடன், டீம் இந்தியாவின் 17 ஆண்டுகால சாதனையும் அழிக்கப்பட்டது. உண்மையில், கடந்த 17 ஆண்டுகளில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டியதில்லை. 


கடந்த 25 மாதங்களில் முதல்முறையாக டி20 தொடரை இழந்த இந்திய அணி: 


கடந்த 25 மாதங்களாக டி20 தொடரில் இந்திய அணி அசைக்க முடியாத அணியாகவே திகழ்ந்தது. நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது மூலம், ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதன்மூலம், இந்திய அணியின் வெற்றி பாதையை அணை போட்டு தடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. கடந்த 13 டி20 தொடரில் இந்திய அணி இழந்த முதல் டி20 தொடர் இதுவாகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு முன்னதாக, இலங்கைக்கு எதிரான தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதன்மூலம், கடந்த 25 மாதங்களாக தொடர்ந்த இந்திய அணியின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது. 


முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரை இழந்த இந்திய அணி: 


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இதுவரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது அல்லது தொடரை சமன் செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் முதல்முறையாக தோல்வியை தழுவியது. முன்னதாக 2022 இல், இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு T20 தொடரில் விளையாடியது, அதில் இந்தியா 4-1 என வென்றது. 


இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தவிர, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை 5 டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியுள்ளது. கடந்த 2022 ம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என டிராவில் முடிந்தது. அதேபோல், கடந்த 2020 ம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்திய அணியிடம் 5-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இது தவிர, 2021 இல் இங்கிலாந்துக்கு எதிரான சொந்த தொடரில் இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றது. 


ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவின் முடிவுகள்



  • 2020: நியூசிலாந்துக்கு எதிராக 5-0 என வென்றது இந்திய அணி

  • 2021: இங்கிலாந்துக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி

  • 2022: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது

  • 2022: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி

  • 2023: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இந்திய அணி