இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


இங்கிலாந்து அணிக்காக சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த இவர், கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு காயம் காரணமாக எந்தவொரு உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவில்லை 


34 வயதான ஸ்டீவன் ஃபின் 6 அடி 7 அங்குலம். இவர் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2010 முதல் 2016 ம் ஆண்டு வரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும், இங்கிலாந்து அணிக்காக 69 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்களையும்,  21 டி20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 






ஓய்வு குறித்து இவர் தெரிவிக்கையில்,” கடந்த 12 மாதங்களாக காயத்தில் இருந்து மீள்வதற்காக என் உடலுடன் போரிட்டு வந்தேன். இறுதியாக நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். கடந்த 2005 ம் ஆண்டு அதாவது என் 17 வயதில் இங்கிலாந்து கவுண்டி அணியாக மிடில்செக்ஸிற்காக நான் அறிமுகமானதிலிருந்து கிரிக்கெட்டை என்பது தொழிலாக விளையாடி வந்தேன். இது என் வாழ்வில் நம்பமுடியாத அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த பயணம் எப்போது சுமூகமாக இருந்தது இல்லை. ஆனால், இந்த கடின பாதையையே நான் அதிகம் விரும்பினேன். 






இங்கிலாந்திற்காக 36 டெஸ்ட் போட்டிகள் உட்பட 126 ஆட்டங்களில் விளையாடியது, நான் கனவு கண்டதை விட அதிகமாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் குறிப்பாக சசெக்ஸ் கிரிக்கெட் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.






கிரிக்கெட் விளையாடுவதற்கு இது ஒரு சிறந்த இடம், கிளப்பில் சேர்ந்ததில் இருந்து களத்தில் அதிக பங்கு வகிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். இங்கிலாந்து, மிடில்செக்ஸ் மற்றும் சசெக்ஸ் ஆகியவற்றுடன் சில அற்புதமான நினைவுகளுடன் நான் ஓய்வு பெறுகிறேன், அற்புதமான மனிதர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் என்னுடன் என்றென்றும் வாழ்வார்கள் “ என்று குறிப்பிட்டு இருந்தார்.