இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் பார்ம் குறித்து கேள்வி எழுந்தது. அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் சொதப்பினார். 

மிரட்டிய சூர்யகுமார் யாதவ்:

இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 83 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த அற்புதமான இன்னிங்ஸிற்காக சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ்கள் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. 

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 83 ரன்கள் குவித்ததன்மூலம் பல்வேறு சாதனைகளை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். அது என்னவென்று கீழே பார்க்கலாம்.

புதிய சாதனை:

சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக இதுவரை  51 டி20 போட்டிகளில் 49 இன்னிங்ஸ்களில் 1780 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறினார். முன்னதாக, இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 68 டி20 போட்டிகளில் விளையாடி 1750 ரன்கள் அடித்து 4வது இடத்தில் இருந்தார். தற்போது அந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். 

இந்த பட்டியலில் விராட் கோலி 4008 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக ரோஹித் 3853 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், கே.எல்.ராகுல் 2265 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

டி20 யின் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:

1. விராட் கோலி - 4008
2.ரோஹித் சர்மா - 3853
3.கே.எல்.ராகுல் - 2265
4. சூர்யகுமார் யாதவ்- 1780
5.ஷிகர் தவான் - 1759
6. எம்.எஸ். தோனி - 1617
7. சுரேஷ் ரெய்னா - 1605
8. ஹர்திக் பாண்டியா - 1134
9. யுவராஜ் சிங் - 1177
10. ஷ்ரேயாஸ் ஐயர் - 1034

100 சிக்ஸர்கள்: 

சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் 3வது சிக்ஸரை அடித்தன்மூலம் மிக விரைவாக டி20 போட்டிகளில் 100வது சிக்ஸர் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெயிலுடன் பகிர்ந்து கொண்டார். சூர்யகுமார் தனது 49 இன்னிங்ஸிலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ் தனது 42 இன்னிங்ஸிலும் 100வது சிக்ஸர்களை அடித்துள்ளனர்.

 

மேலும், டி20யில் 100க்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பிறகு மூன்றாவது இந்தியராகவும், ஒட்டுமொத்தமாக 13 வது வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் படைத்தார். 

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:

  • ரோஹித் சர்மா - 182 சிக்சர்கள்
  • மார்ட்டின் கப்டில் - 173 சிக்சர்கள்
  • ஆரோன் பின்ச் - 125 சிக்ஸர்கள்
  • கிறிஸ் கெய்ல் - 124 சிக்ஸர்கள்
  • பால் ஸ்டெர்லிங் - 123 சிக்ஸர்கள்
  • இயான் மோர்கன் - 120 சிக்ஸர்கள்
  • விராட் கோலி - 117 சிக்ஸர்கள்
  • ஜோஸ் பட்லர் - 113 சிக்சர்கள்
  • எவின் லூயிஸ் - 111 சிக்சர்கள்
  • கிளென் மேக்ஸ்வெல் - 107 சிக்ஸர்கள்
டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் 5 வீரர்கள்
ஆட்டக்காரர் சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா 182
விராட் கோலி 117
சூர்யகுமார் யாதவ் 103
கேஎல் ராகுல் 99
யுவராஜ் சிங் 74