இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 209 ரன்கள் பின் தங்கியுள்ளது.
அரைசதம் விளாசிய கேப்டன்:
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் போட்டியின் இரண்டாவது நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி, ஒரு விக்கெட்டை இழந்து 86 ரன்கள் சேர்த்து இருந்தது. இதையடுத்து தொடங்கிய 3வது நாள் ஆட்டத்தின் போது கேப்டன் பிராத்வெயிட் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்த வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். மறுமுனையில் களமிறங்கிய மற்ற வீரர்கள் ரன்களை சேர்க்காவிட்டாலும், விக்கெட்டை எளிமையாக விட்டுக் கொடுக்காமல் நிலைத்து நின்று ஆட முற்பட்டனர்.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்:
மூன்றாவது நாளின் போட்ட் தொடங்கி நிறிது நேரத்திலேயே பெய்த மழையால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய போது இந்திய அணியினர் சிறப்பான பந்துவீச்சு மூலம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் மெக்கென்சி 32 ரன்களிலும், பிராத்வெயிட் 75 ரன்களிலும், பிளாக்வுட் 20 ரன்களிலும், சில்வா 10 ரன்களிலும் நடையை கட்டினர்.
இந்திய அணி முன்னிலை:
தொடர்ந்து, மோசமான வெளிச்சம் காரணமாக முன்கூட்டியே 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நேற்றைய நாளில் வெறும் 67 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இதனால், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை சேர்த்துள்ளது. அதான்சே 37 ரன்கள் உடனும், ஹோல்டர் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், அஷ்வின் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். தொடர்ந்து, இந்திய அணியை காட்டிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 209 ரன்கள் பின் தங்கியுள்ளது.